“புதிய அரசுக்கு 6 மாத கால அவகாசம் தேவை” – கார்த்தி சிதம்பரம்!

சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது தவறானது. நாங்கள் கூட்டணியில் இருந்திருந்தாலும் திமுகவினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.
எனவே, ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை தர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ், தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாகக் கூறினார். சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
முதல் நாளிலேயே தீர்வு காண வேண்டும் என்பது என்னை பொருத்தவரை நியாயம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், தமிழக காங்கிரஸ் மேலிடம் குறித்து தொடர்ச்சியாக புகார் கூறி வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அதற்குரிய ஆதாரங்கள் இருந்தால், அதை அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *