
ரஜினிகாந்த் உடன் வேட்டையன் படத்தில் நடித்து வரும் நடிகை துஷாரா விஜயன் பிகினி உடையில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்தவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போதை ஏறிப் புத்தி மாறித் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்தில் அவர் நடித்த மாரியம்மா என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு, அப்படம் துஷாராவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துப் பாராட்டுக்களை பெற்றார்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்த துஷாரா, அடுத்ததாகக் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துத் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து வசந்தபாலன் இயக்கிய அநீதி திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் துஷாரா கைவசம் தற்போது இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் உள்ளன. அதில் ஒரு படம் தனுஷ் இயக்கி நடிக்கும் டி50 மற்றொரு திரைப்படம் ரஜினிகாந்தின் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார்.
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் துஷாரா விஜயன், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றபோது அங்குப் பீச் ஓரம் பிகினி உடையில் படு கவர்ச்சியாகப் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தத் திடீர் கவர்ச்சி அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.


