ஆ.ராசா பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்..!

திமுக  துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பேச்சிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திமுக  துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டிக்குமாறும், அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். சில திமுகவினர் “கண்ணியம்” தவறுவது தொடர்வதாகவும், “கட்டுப்பாடு” நிலை நிறுத்தும் “கடமை”யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *