Advertisements

மேஷம்

இன்று செயல்கள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். உங்கள் வீட்டில் விருந்தினர் வருகை காரணமாக இன்று நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். அவர்களுடன் சேர்ந்து மகிழும் வாய்ப்பு பெறுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.உங்கள் கடின உழைப்பின் காரணமாக உங்கள் பணியில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.இன்று பண வரவு காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்

இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது பாதகமான விளைவுகள் ஏற்படா வண்ணம் வார்த்தைகளைக் கவனித்துப் பேச வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.உங்கள் பணியில் குறைந்த அளவு திருப்தியே காணப்படும். தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. உங்களின் பதட்டமான மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். நல்ல புரிந்துணர்விற்கு நட்பான அங்குமுறை வேண்டும். இன்று நிதிநிலைமை லாபம் தரும் வகையில் அதிர்ஷ்டகரமாக இருக்காது. தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம்.பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே. பற்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.உணவில் கவனம் தேவை.
மிதுனம்

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். சவால்கள் நிறைந்து காணப்படும் நாள் என்பதால் உங்கள் உணர்வுகளைக் கட்டுபடுத்த வேண்டும். மனக் குழப்பங்களை நீக்கித் தெளிவாக இருக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாகக் காணப்படும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. பணிகளைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.உங்களின் நேர்மறையான உணர்வுகள் காரணமாக உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனால் உறவில் அமைதியும் திருப்தியும் நிலவும்.அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கணிசமான தொகை சேர்க்கும் வாய்ப்பும் இன்று குறைவு. இன்று அதிர்ஷ்டமும் உங்களுக்குச் சாதகமாக இல்லை.வயிற்று வலியால் நீங்கள் பாதிக்கபடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
கடகம்

இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் நேர்மையான முயற்சிமூலம் உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை நீங்கள் உணரும் நாள். இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். உங்கள் செயல் திறனில் உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் தொடர்ந்து கடின முயற்சி செய்து உங்கள் திறமைகளை மேம்படுத்துவீர்கள்.உங்கள் இருவரிடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். இதனால் உறவில் திருப்தியான நிலை இருக்காது.இன்று பணபுழக்கம் அதிகமாகக் காணப்படும். இந்தப் பணத்தை ஆடம்பரப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தலாம்.உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். எனவே உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. உங்கள் அன்றாட செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் உரையாடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து உரையாடுங்கள். பிரார்த்தனைமூலம் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும்.உங்கள் சக பணியாளர்களைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். பொறுமையாக விஷயங்களைக் கையாள வேண்டும்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். உங்கள் துணையிடம் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும்.பணபுழக்கம் போதிய அளவில் இருக்காது. உங்கள் நெருங்கிய நபர் ஒருவரின் திடீர் மருத்துவ செலவைச் சந்திக்க நேரும்.கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
கன்னி

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடன் பிறந்தவர்களால் தொல்லையும் பிரச்சினைகளும் ஏற்படும். இன்று அவர்களைத் தவிர்ப்பது நல்லது.பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. கடினமாக உழைத்தாலும் உங்கள் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரமும் நன்மதிப்பும் கிடைக்காது.உங்கள் துணையிடம் பேசும்போது அமைதியைக் கடைபிடிக்கவும். சில சமயங்களில் நீங்கள் அமைதி இழக்க நேரலாம். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது.பொறுப்புகள் அதிகரிக்கும் காரணத்தால் அதிகம் செலவு செய்ய நேரும்.பதட்டம் காரணமாகக் கழுத்து விறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்

இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள் அல்ல. இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும்.இன்று அதிகப் பணிகள் காரணமாகச் சோர்ந்து போவீர்கள். எனவே பணிகளைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்பொழுதான் அதற்குரிய பலன் கிடைக்கும்.உங்கள் துணையிடம் உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள். உறவில் நல்லிணக்கம் பேண இத்தைகைய உணர்ச்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. பணத்தை முடிந்த அளவு சேமிக்க நீங்கள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உணவில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கக் காரமான சூடான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. பணத்தை முடிந்த அளவு சேமிக்க நீங்கள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உணவில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கக் காரமான சூடான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்

உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைய இன்று கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அவசியம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நல்ல பலன் காண பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.பணிகளைக் கையாளும்போது உங்கள் திறமைகளை வெளிபடுத்துவீர்கள். உங்கள் பணிக்குத் தகுந்த அங்கீகாரமும் நன் மதிப்பும் பெறுவீர்கள்.நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாகவும் நேரடியாகவும் நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சியை பராமரிக்க முடியும்.நிதிநிலையில் இன்று அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் தன்னம்பிக்கை காரணமாக இன்று நீங்கள் துடிப்புடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். அதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளைக் குறைந்த முயற்சியில் செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் நன்மை அளிக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பணியிடத்தில் சுமூகமான பலன்கள் கிடைக்கும். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள்.உங்கள் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இதனால் உங்கள் துணையிடம் மகிழ்ச்சி காண்பீர்கள்.இன்று போதிய பண வரவு காணப்படும். உங்கள் குடும்ப அபிவிருத்திக்காகச் செலவு செய்வீர்கள்.உங்களிடம் காணப்படும் சிறந்த மனநிலை மற்றும் புத்துணர்ச்சி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்காது. நீங்கள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கடைபிடிக்க வேண்டும். எது நடக்கிறதோ அதை அப்படியே எற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக அமைய இறை வழிபாடு மற்றும் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள்.அதிகப் பணிகள் காரணமாக அதிருப்தி காணப்படும். உங்கள் மேலதிகாரிகளுடன் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.பணிகள் அதிகம் காணப்படுவதால் ஒய்வு கிடைப்பது அரிது.உங்கள் மனதில் குழப்பமான உணர்வுகள் காணப்படும். இதன் காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.இன்று பணபுழக்கம் குறைந்து காணப்படும். நிதியைப் பொறுத்த முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். பணத்தை கையாளும்போது கவனம் தேவை.உங்கள் தாயின் உடல் நலத்திற்காகப் பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்குக் கவலையை உண்டாக்கும்.
கும்பம்

இன்று முன்னேற்றகரமான பலன்கள் இருக்காது. உங்கள் மனக் குழப்பமும் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும். இது உங்களுக்குப் பாதகமாக இருக்கும்.பணியிடத்தில் திருப்திகரமான பலன்கள் காணப்படாது. அதிக வேலை காரணமாக உங்கள் பணிகளைக் குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரலாம். எனவே இன்று மகிழ்ச்சியுடன் இருக்க நட்பான உறவைப் பகிர்ந்து கொள்வது நல்லது.
இன்று பணபுழக்கம் குறைவாகக் காணப்படும். உங்கள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இன்று பணபுழக்கம் குறைவாகக் காணப்படும். உங்கள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்

இன்று உங்களுக்குச் சாதகமான நாள். நம்பிக்கை நிறைந்து காணப்படும் நாள். கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும்.பணியிடத்தில் திருப்தியான சூழல் காணப்படும். கடினமான உழைப்பின் மூலம் நற்பெயரும் அதன் மூலம் நன்மதிப்பும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள்.இன்று நிதிநிலையில் அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதிர்ஷ்டம் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் காணப்படும்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

