பெண்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை கூட கொடுக்க முடியாத திராவிட மாடல் ஆட்சி – அண்ணாமலை!

சென்னை: 

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்தத் திராவிட மாடல் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கல்லூரிக்குள் நுழைந்து அங்குப் பயிலும் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியிலிருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்தத் திராவிட மாடல்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *