திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் குறித்து கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விமர்சித்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு தவெக ஐடி விங் பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக முப்பெரும் விழாவை விமர்சிக்கும் வகையிலும், கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். முதல்-அமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள், இந்நாள் ரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?. மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?. அன்று ‘வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?’ என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப்புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து ‘நடிக்கிறார்’ என்பது உச்சபட்ச நகைமுரண்!
‘ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி’ என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



