ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் தற்போது 12GB + 256GB, 12GB + 512GB மற்றும் புதிய 16GB + 512GB என மூன்று மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 16GB RAM + 512GB மாடலின் விலை ரூ.68,999. இது பிளாக் வெல்வெட் மற்றும் கிரீன் சில்க் நிறங்களில் அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய வேரியண்டில் RAM மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற ஹார்டுவேர் அம்சங்களில் மாற்றம் இல்லை. 12GB + 256GB மாடல் ரூ.54,999-க்கும், 12GB + 512GB மாடல் ரூ.59,999-க்கும் கிடைக்கின்றன.
ஒன்பிளஸ் 13s-ல் 6.32-இன்ச் 1.5K LTPO ProXDR AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இடம்பெற்றுள்ளன. 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் 5,850mAh பேட்டரியுடன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 உடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனுக்கு 4 OS அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

