தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘துவா’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.

மூத்த மகள் துவா பிறப்பதற்கு முன்பாகவும் இந்த தம்பதி சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2-வது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *