ரேஷன் கார்டு இல்லாதவர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கலாம்..!

Advertisements

2025ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பரிசு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என 3 வகையாகப் பிரித்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் திருநாளையொட்டி வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொங்கல் பரிசைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்யக் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பரிசு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என 3 வகையாகப் பிரித்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/- விற்பனை செய்யக் கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசி பருப்பு, உளுதம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்களை ரூ.499/- விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெரும் பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, கூட்டுறவுப்பு, துவரம் பருப்பு, உளுதம் பருப்பு, கடலைப் பருப்பு, புளி, தனியா, சோம்பு, ஏளக்காய் உள்ளிட்ட 35 பொருட்கள் ரூ.999/- வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும் பொங்கல் தொகுப்பில் விலை இல்லாமல் நாட்டு சர்க்கரை 500 கிராம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொங்கல் தொகுப்புகளை மண்டலவாரியாக அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்காகத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *