தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி,  உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு-தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர்,கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இன்றும் நாளையும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நேமூர் ஆகிய இடங்களில் 7 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *