டிராகன் படத்தின் சென்சார் அப்டேட்!

Advertisements

அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ‘ரைஸ் ஆஃப் தி டிராகன்’ மற்றும் ‘வழித்துணையே’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் வெளியான டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ‘டிராகன்’ திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், ‘டிராகன்’ படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரன்-டைம் 2 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *