நீடித்த வளர்ச்சிக்கான ஆலோசனைக் களம்..!

Advertisements

சென்னை ஆவடி அருகே உள்ள நாசரத் கலை அறிவியல் கல்லூரியில் நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு உச்சி மாநாடு நடைபெற்றது.

ஆவடியில் உள்ள நாசரேத் கலை அறிவியல் கல்லூரியில், “மக்கள், பூமி மற்றும் வளமை” என்ற தலைப்பில், ஐ.நா.வின் நிலைத்த முன்னேற்றக் குறிக்கோள்கள் குறித்த உச்சி மாநாடு தொடங்கியது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், கொள்கை வல்லுநர்கள், வளர்ச்சி நடைமுறைப் பணியாளர்கள், சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு, உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

மாநாட்டின் போது, 122 ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புதுமையான நடைமுறைகளை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டது. இதில் INCHE, உயர்கல்வி நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தெபோரா ஹார்சன் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக் கோட்பாடுகளை அடித்தள மட்டத்தில் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *