
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் மேற்கொண்டுள்ள நாடுகள் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இந்த வரி விதிப்பை சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் அதிபர் டிரம்ப் அமல்படுத்தினார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் மேற்கொண்டுள்ள நாடுகள் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என அதிபர் தெரிவித்தார்.இது தொடர்பாக அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளப் பதிவில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக தெரிவித்தார். இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.



