“ஈரானின் அணுசக்தி திட்டம் புதைக்கப்பட்டது” – அமெரிக்க அமைச்சர் பரபரப்பு தகவல்!

Advertisements

அதிபர் டிரம்ப் ஈரானின் இராணுவத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அழித்து, அதன் அணுசக்தித் திட்டத்தை புதைத்துவிட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  அதிபர் டிரம்ப் ஈரானின் இராணுவத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அழித்து, அதன் அணுசக்தித் திட்டத்தை புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த போரில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். மிரட்டிப் பணம் பறிப்பதைப் பாதுகாப்பு உத்தரவாதங்களாகக் காட்டி ஈரான் தப்பிப் பிழைத்து வருவதாகத் தெரிவத்துள்ளார்.

தெஹ்ரானை எதிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அஞ்சுபவர்கள், அமெரிக்காவை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். தெஹ்ரான் தனித்து நிற்கும் வரை, அந்த கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே நமது நோக்கம் என்று குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *