பஸ் கண்டக்டரில் இருந்து சூப்பர் ஸ்டார் வரை – ரஜினியின் வாழ்க்கை வரலாறு!

நடிகர் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகளும், இயக்குநருமான சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம், பலருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் நடத்துனராகப் பணியாற்றிய அவர், தனது விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் “சூப்பர் ஸ்டார்” என்ற உயரத்தை அடைந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவரது மகளும், இயக்குநருமான சவுந்தர்யா, ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் தனது சுயசரிதை எழுதி வரும் நிலையில் அவரது ரசிகர்களிடேயே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *