K. A. Sengottaiyan: புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்!

Advertisements

கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரத்து செய்யப்பட்ட  புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியிலிருந்து கோபிசெட்டிபாளையம் நகர பகுதி வழியாகச் சத்தியமங்கலம் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலைகளாக மாற்றியமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நனைபெற்று பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் கோபி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகக் கோபியிலிருந்து மொடச்சூர் கலிங்கியம் அளுக்குளி வழியாகச் சத்தியமங்கலம் செல்லும் சாலைவரை இணைப்புச் சாலை உருவாக்குவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள 19 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சித்தோடு சத்தியமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோபி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஏற்கனவே துவங்கப்பட்ட புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தினை ரத்து செய்வதாகவும் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சாரலபில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்தத் திட்டம் ரத்து செய்வது குறித்து  கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது.

கோபி நகருக்குள் ஏற்படும்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில்  புறவழிச்சாலை அமைக்கப்படும் திட்டம் தேவையற்றதாகக் கருதி அத்திட்டம்  ரத்து செய்யப்படுவதாக அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால்  பேருந்து நிலையம் உட்படமுக்கியமான அரசு அலுவலகங்கள் அனைத்தும் கோபி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எதிர்காலத்தில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்புகள் அதிகமாக உள்ளது ஆகவே அரசால் ரத்து செய்யப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தினை மீண்டும் ஆய்வு செய்து பணிகளைத் தொடங்கிட வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *