“மழை இல்லாமலும் விவசாயம் நடக்கும்” – அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடைபெறும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார். அப்போது, 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடைபெறும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *