ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு அவசரமில்லை! – டிரம்ப் அதிரடி!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா–ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, போரில் தாங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துவிட்டதாகவும், ஈரான் கடும் பணவீக்கத்தைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில், ஈரான் தனது பொதுமக்களை மிக மோசமாக நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், போரில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை ஈரான் கொன்று குவித்து வருவதாகத் தெரிவித்த டிரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், அவர்களுக்கு எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், அவர்கள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *