American Open Tennis : தகுதிச் சுற்றில் அசத்தல் வெற்றி பெற்ற டோபி சாமுவேல்.!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் டோபி சாமுவேல் வெற்றி பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் டோபி சாமுவேல், சிலி நாட்டின் கிறிஸ்டியன் கரின் உடன் மோதினார்.

இதில், சிறப்பாக விளையாடிய டோபி சாமுவேல் 4-6, 6-4, 5-0 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் கரினை வீழ்த்தினார்.

இதன்மூலம், டோபி சாமுவேல் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *