ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க நிபந்தனைப் பட்டியல்: ஈரான் தகவல்.!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைப் பட்டியலை ஈரான் தயாரித்து வருவதாக ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு குழுவின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்துள்ளார்.

 ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு குழுவின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்தியஸ்தர்கள் தெஹ்ரானிடம் நிபந்தனைகளை வகுக்குமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைப் பட்டியலை ஈரான் தயாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவது அந்நிபந்தனைகளுள் ஒன்று என்றும் குறிப்பிட்டார். இந்த நீர்வழிப்பாதை வழியாக ஒரு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமைக்க ஓமனுடன் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்தப் பாதையின் சில பகுதிகள் ஓமன் கடல் பகுதியிலும், சில பகுதிகள் ஈரான் கடல் பகுதியிலும் அமையும் என்றும் கூறினார்.

அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கப்பல்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு மைய கால்வாயை பயன்படுத்தும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *