
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்..
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா – அமெரிக்க வீரர் பேபியானோ கருணா உடன் மோதினார்..
கிளாசிக்கல், ராபிட், பிலிட்ஸ் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் பேபியானோ கருணாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்..
இதன்மூலம், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும், அவர் கிராண்ட் செஸ் டூரை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்..
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குத் தனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்..
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்..


