நேபாளத்தில் 400 தமிழர்கள் மீட்பு : இன்று இரவு சென்னை வருகை – ராஜ்மோகன் அறிவிப்பு.!

Advertisements

தமிழகத்தில் இருந்து ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணமாக நேபாளத்திற்குச் சென்ற சுமார் 400 பேர் வரை அங்கு பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்தனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட தங்களது ஆவணங்களை முற்றிலாகவும் தவறவிட்டுவிட்ட அவர்கள் படும் அவஸ்தைகள் குறித்துத் தகவல்கள் வெளியாயின. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைத் தொடர்பு கொள்ள மாநில அரசும், அதிகாரிகளும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழகத்தில் இருந்து சுமார் 400 பேர் நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழலிலிருந்து தமிழர்களை மீட்டு கொண்டு வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர், இருப்பினும் அவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நேபாளம் சென்ற பல தமிழர்கள் தங்களது பாஸ்போர்ட்களைத் தவறவிட்டுள்ளனர். அவர்களைத் தொடர்பு கொண்டு மீட்கும் பணியில் தொடர்ந்து போராடினோம். தற்போது மீட்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *