நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கல் – மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைந்ததால் கோசி மற்றும் திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார். தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்த நிலையில், கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நேபாளத்திற்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு காத்மாண்டு சென்று, அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து, நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *