மீண்டும் வெடிக்கும் அமெரிக்கா – ஈரான் மோதல் – டிரம்ப் கடும் எச்சரிக்கை!

இராணுவ ரீதியாக முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஈரான்’ என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானும், அமெரிக்காவும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு இடைக்கால உடன்பாட்டை எட்டியிருந்த நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து வெளியேற முயன்ற கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஈரான் டிரோன்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில்,  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு மையங்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தங்களால் தொடர்ந்து நிதானமாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியாக முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஈரான்’ என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *