இந்தியா-செஷல்ஸ் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா மற்றும் செஷல்ஸ் இடையேயான நட்பு சீராகவும், வலுவாகவும் வளர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

செஷல்ஸ் நாட்டின், அதிபர் பேட்ரிக் ஹெர்மினி அளித்த அதிகாரப்பூர்வ அரசு விருந்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியா மற்றும் செஷல்ஸ் இடையேயான நட்பு சீராகவும், வலுவாகவும் வளர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி பேசிய போது, இந்தியா எப்போதும் செஷல்ஸ் நாட்டின் உண்மையான, அசைக்க முடியாத நண்பனாக இருந்து வருவதாகத் தெரிவித்தார். இந்திய மக்களின் இந்தப் பாசத்தை தங்கள் நாட்டு மக்களும், இங்கு வாழும் துடிப்பான இந்திய வம்சாவளியினரும் முழுமையாக உணர்ந்துள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *