
பிரபல நடிகர் நிவின் பாலி நடிக்கும் விஜயம் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் நிவின் பாலி ‘விஜயம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இசைப்பாளர் மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் மமிதா பைஜு, ஆர்ஷா சாந்தினி பைஜு, வினய் ஃபோர்ட், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



