பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகளை ஏமாற்றிய த.வெ.க அரசு!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு  என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தமிழக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தது குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,  பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு என்று குறிப்பிட்டார்.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று கூறி  விவசாயிகளுக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

 

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று கூறிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்துள்ள நிலையில் தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்தார். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா என முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *