
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாகப் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட் உரையின்போது திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங்குழு
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது என்று பேசினார்.
