காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கிறார் மாணிக்கம் தாகூர்!

சத்தியமூர்த்தி பவனில் வருகின்ற 29-ஆம் தேதி  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகத் தான் பொறுப்பேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் சவாலான பொறுப்பு என்பது எனக்குத் தெரியும் என்று கூறினார். தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் அன்பான தலைமையில் இந்த ஆட்சி நடக்கும் இத்தகைய சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது தனக்குப் பெருமையாக உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு என்பது எப்படி நமது லட்சியமாக இருந்ததோ, அதேபோல் ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே நமது அடுத்த இலக்காகும். அதற்குத் தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும், அதுவே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், வரும் 29-ஆம் தேதி மாலை 4 மணிக்குச் சத்தியமூர்த்தி பவனில் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *