சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங் தளமாக மாற்றிய ஆளுங்கட்சி – உதயநிதி விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற்ற மாவட்ட திமுக அயலக அணிச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது, சட்டமன்றத்தைச் சினிமா ஷூட்டிங் போல் ஆளுங்கட்சி மாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், சட்டசபையில் முதலமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை என விமர்சித்தார். எனவே, தமிழக சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்த ஆட்சியின் கொடுமைகளை இளைஞர்கள் தட்டிக் கேட்டு வருகின்றனர்.
அப்படி தட்டிக் கேட்கும் இளைஞர்களை சோபா மாடல் அரசு கைது செய்து வருவதாகத் தெரிவித்தார். தூய சக்தி என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே குதிரை பேரத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *