ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அதிரடியானக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதா அல்லது அந்நாட்டை முற்றிலுமாக அழிப்பதா என்பதைத் தாமே முடிவு செய்யப் போவதாக அவர் பகிரங்கமாக எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரானுடன் ஒரு நல்ல அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரானை அணுஆயுதம் பெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அளவில் ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி மற்றும் எச்சரிக்கை நிறைந்த பேச்சைத் தொடர்ந்து, ஐநா பேரவையில் இருந்த ஈரான் பிரதிநிதிகள் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது..


