இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. Israeli–Palestinian conflict
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசித் தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக அந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்த நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தார். 100 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள்மூலம் காசா நகரில் தாக்குதலைத் துவக்கி உள்ளது.
இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில்இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
