சர்வதேச சட்டங்களை மீறும் டிரம்ப்..!

கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புறப்பட்டுச் சென்றார்.

அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முயற்சி எந்த நிலைமையில் உள்ளது என்று செய்தியாளர்கள் வினவினர். அதற்கு, அதை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று டிரம்ப் பதிலளித்தார். டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்றும் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னதாக டிரம்பின் நாடு பிடிக்கும் வெறி, உலகச் சட்டங்களை மீறிய செயல் என்று பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்தார்.அமெரிக்காவின் பழைய அதிகார நிலை மீண்டும் வர வாய்ப்பில்லை என்று கனடா பிரதமர் மார்க் கார்னியும் தெரிவித்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *