44 பேர் பேர் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகத் தகவல்.!

கரூரில் தவெக கூட்டத்தில் நேர்ந்த நெரிசல் குறித்துத் தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாகக் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டுத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் நேர்ந்த நெரிசலில் சிக்கி 95 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இரவோடு இரவாகக் கரூருக்குச் சென்றார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள் சுப்பிரமணியன், எ.வ.வேலு, நேரு உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடனிருந்தனர்.

இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் தன் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *