எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்: அண்ணாமலை அடித்த பல்டி 

Advertisements
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி பற்றி எடுத்த முடிவை மாற்றுவதற்கு நான் யார்? அவர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பது தான் எனது வேலை… அமித்ஷா கூறியது போல் கூட்டணி மந்திரி சபை என்பதில் மாற்றம் இல்லை என பகிரங்க குரல் கொடுத்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளார் .
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தற்போது அதிரடியாக செயல்பட்டு வருகிறது  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் அனைத்தையும்  கவனித்துக் கொள்ளும்படி பிரதமர் மோடி அமித்சாவசம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளார் .
இந்த நிலையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் யார் முதலமைச்சர் என்கிற கேள்விக்கு மட்டும் சரியான பதில் சொல்லாமல் கூட்டணி மந்திரி சபை என ஒட்டு மொத்தமாக பேசிவிட்டு சென்று விட்டார் . இதனால் எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சரா ?என்ற கேள்வி தொடர்பாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு குறித்து தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்து இருந்தார் . அவர் பேசும்போது கட்சி மேலிட தலைவரான அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதை இரண்டு முறை தெளிவாக சொல்லிவிட்டார் அவர் சொன்னதை நான் எப்படி மாற்றி கூற முடியும் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் அமித்ஷா எடுத்த முடிவு தான் அடிமட்ட தொண்டனாகிய எனது முடிவும் எனக் கார சாரமாக பேசியிருந்தார்
இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் அவர் பேசும் பொழுது அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் நாங்கள் அனைவரும் ஒரே புள்ளியில் இணைந்து செயல்படுகிறோம் என்று கூறி இருக்கிறார்
தற்பொழுது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அவரது சுற்றுப்பயணத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.
இதனை உற்று நோக்கிய பாரதிய ஜனதா கட்சி தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் இதன் முதல் கட்டம் தான் அண்ணாமலையின் பேச்சு என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள் . அண்ணாமலையை தொடர்ந்து விரைவிலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடி தான் முதலமைச்சர் என அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் மூலம் வெகு விரைவிலேயே அதிமுக பாஜக கூட்டணி குழப்பம் முடிவுக்கு வரும் என தெரிகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *