
தசை பதற்றம் பொதுவாகத் தானாகவே போய்விடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில், உணர்வின்மை நீங்கியபிறகும் வலி இருக்கும். அந்தசமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்கலாம்.
நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது படுக்கும்போது தூங்கும்போது அல்லது நிற்கும்போது முதுகு மற்றும் கால் தசைகளில் இறுக்கம் ஏற்படும். இரவில் தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், சட்டெனக் கண் விழித்துப் பார்த்தால், கால் தசைகள் மரத்துப் போயிருக்கும். இதைப் பலரும் அனுபவித்திருக்கக்கூடும்.
தசை பதற்றம் பொதுவாகத் தானாகவே போய்விடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில், உணர்வின்மை நீங்கியபிறகும் வலி இருக்கும். அந்தசமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்கலாம்.
தசை பதற்றத்திற்கான காரணங்களில் ஒன்று நீரிழப்பு. நீர் பற்றாக்குறை தசை நெகிழ்ச்சித்தன்மையை பாதிக்கிறது. இரவில் பக்கவாட்டில் படுக்கும்போது அல்லது நடக்கும்போது, உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும்போது தசை வலி உண்டாகும். தசைகளில் லாக்டிக் அமிலம் குவிதல் அல்லது வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் இல்லாததால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
தசைப்பிடிப்புக்குப் பிறகு உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்கள். இது தசைகளைத் தளர்த்த உதவும். அந்தப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படும் வகையில் மசாஜ் செய்யுங்கள், இதனால் வலி குறையும் அல்லது ஒரு டவலை வெந்நீரில் நனைத்து நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இப்போது ஈரமான டவலை வலியுள்ள இடத்தில் பிடித்துக் கொள்ளுங்கள். இது மிகவும் வசதியாக இருக்கும்.
ஒரு நாற்காலியில் சாய்ந்து அமரவும். நீட்டப்பட்ட காலை இடுப்புக்கு நேராக முன்னோக்கி உயர்த்தவும். 10 விநாடிகள் அப்படியே இருங்கள். இப்படி சில முறை செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். தசை பதற்றம் நீங்கும்.
தசை பதற்றம் அடிக்கடி ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும். தூங்கும்போது உங்கள் காலடியில் ஒரு தலையணையை வைக்கவும். பச்சை காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் சாப்பிடுங்கள். பாட்டில் தண்ணீர் குடிக்கவும். கால் தசைகள் வீங்கி, தோலின் நிறம் மாறுவதைக் கண்டால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.


