Anbumani : 207 பள்ளிகளை மூடிய திமுக அரசு… அன்புமணி குற்றச்சாட்டு!

Advertisements

மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசு பள்ளிகளைத் திமுக அரசு மூடியுள்ள நிலையில், திமுக அரசுக்கும் மூடுவிழா நடத்த மக்கள் தயாராகிவிட்டதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாகப் பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றை மூடி வருவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.இப்போது மொத்தமுள்ள 37 ஆயிரத்து 554 அரசு பள்ளிகளில்  52 இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் 12 ஆயிரத்து 970 தனியார் பள்ளிகளில் 63 இலட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பயில்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.பல தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற நிலையும், பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயிலும் நிலைமையும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தீர்வு அரசு பள்ளிகள்மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது தானே தவிரப் பள்ளிகளை மூடுவது அல்ல என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்னும் சூழலில், தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் எவ்வாறு சேர்ப்பார்கள்? என்று வினவியுள்ளார்.
அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்து இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றத் தமிழக அரசு தவறியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *