
14- ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் இன்று விளையாட உள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 14- ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதன் இறுதி போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதிய இரு அணிகளும் 6-இல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன.மேலும், 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.
இதில், உலகக் கோப்பையை 8- ஆவது முறையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்பில் ஜெர்மனியும், முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த ஸ்பெயினும் போட்டிப்போவதால் ஆக்கி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


