முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?

Advertisements

பழனி முருகன் கோவிலில் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி 2700 ரூபாய் விலைகொண்ட முருகன் மாநாட்டு மலரைக் கட்டாயப்படுத்தி விற்க முயல்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்று வினவியுள்ளார்.முருகன் வரலாறு என்று கூறி விற்கும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் கருத்துகளும், படங்களும் நிறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும்போது  ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *