முதலமைச்சர் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!

Advertisements

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு, அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டம் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக நடைபெறுகிறது. முன்னதாக, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வருகிற 31-ந்தேதி உரையாற்றுகிறார்.

இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 31-ந்தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற இருக்கிறார்.

முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பிறகு இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவு பெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டிப் பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *