Donald Trump : அதிபர் டிரம்ப்புக்கு எதிராக கவர்னர் காவின் நியூசம் வழக்கு

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக, கலிபோர்னியா கவர்னர் காவின் நியூசம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை, வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறையினர் பல்வேறு மாகாணங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி நுாற்றுக்கணக்கானோரை கைது செய்துள்ளனர்.  இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு அமைப்பினர், மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க லாஸ் ஏஞ்சலசில் அதிரடிப் படைகளை டிரம்ப் குவித்துள்ளார். மேலும் கலவரத்தை கட்டுபடுத்த 2,000 அதிரடிப் படை போலீசார் மற்றும் ‘மரைன்’ பிரிவின் 700 வீரர்கள் அனுப்ப பட்டுள்ளனர்.  வைக்கப்பட்டுஉள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாண கவர்னர் காவின் நியூசம் தன்னுடன் கலந்தாலோசிக்காமல் அதிரடிப்படை மற்றும் ராணுவத்தினரை டிரம்ப் அனுப்பியயுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *