
கடந்த முறை போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம் எனச் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.தி.மு.க.வுடன், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும். தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றித் தேசிய தலைமை முடிவு செய்யும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதுபற்றிப் பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலையெல்லாம் பாசிச ஆட்சி நடத்துவது பற்றிதான். எனவே பொதுமக்கள், மாணவர்களுக்குப் பாதிப்பு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார்.
அப்போது அந்த மேடைகளில் அவர் தமிழகத்துக்கு செய்த திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன்?மு



