
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
அதன்பின்னரும் விலை ஏறி வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்தே காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகி


