
அமெரிக்கா என்றாலே உலக நாடுகள் மத்தியில எப்பவுமே ஒரு பெரிய பில்டப் தான்! “நாங்க தான் வல்லரசு, நாங்க தான் கெத்து” என்று மார்தட்டிக்கொள்வார்கள். ஆனா இப்ப நடந்துகொண்டிருக்கிற கூத்தைப் பார்த்தா… “என்னடா இது உலக மகா வல்லரசுக்கு வந்த சோதனை?” என்று தான் சொல்ல தோன்றுகிறது.‘
2016 ம் ஆண்டு இந்தியானாவில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிய போது, சீனா அமெரிக்காவிற்கு முதன்மையான பொருளாதார எதிரியாகும் என்ற கருத்தை முன் வைத்தார். “சீனா நமது நாட்டைச் சுரண்டுவதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது” என்று பேசினார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்றதும் “சைனாவுக்கு ஆப்பு வைப்பேன், வரியை ஏற்றுவேன்” என்று பெரிய சீன் எல்லாம் போட்டு கொண்டு திரிந்தார். ஆனால், இப்போது, என்னடா எண்டாவென்றால், டிரம்ப் கூண்டோடு கைலாசம் போற மாதிரி, அமெரிக்காவிண் அத்தனை பெரிய டெக்னாலஜி முதலாளிகளையும் கூட்டிக்கொண்டு பீஜிங்கில் போய் இறங்கியிருக்கார்.
டெஸ்லா அதிபரும் உலகப் பணக்காரர் எலான் மஸ்க் , ஆப்பிள் முதலாளி டிம் குக் , இப்ப உலகத்தையே ஆட்டிப்படைக்கிற AI சிப் கம்பெனி Nvidia-வின் முதலாளி ஜென்சன் ஹுவாங் இது போக Meta, Boeing, Mastercard, Visa தலைவர்கள் என அனைவருமே டிரம்புடன் சீனா சென்றுள்ளனர்.
இவர்களில் எலான் மஸ்க்கும், ஜென்சனும் தனி கெத்தாக டிரம்ப்போட ஜனாதிபதி விமானத்திலேயே சென்றுள்ளனர். ஊருக்குள்ள என்னவோ சைனா கூட சண்டை மாதிரி ஒரு பில்டப், ஆனா அங்க போய் ரகசியமா நடக்கிறது வேற!
வெளியில சைனாவைத் திட்டினாலும், அமெரிக்கப் பணக்காரர்களுக்குத் தெரியும் “சீனச் சந்தை இல்லையென்றால் நாம் சோலி முடிந்து விடுவோம் என்று. இதனால்தான், ஸீ ஜின்பிங்கிடம் போய் “கொஞ்சம் சந்தையைத் திறந்து விடுங்க சார்… என்று கேட்டுள்ளனர்.
Nvidia நிறுவனத்தின் தலைவர் ஜென்சன் ஹுவாங் 50 பில்லியன் டாலர் சந்தையை சீனாவில இழக்க இவர் விரும்பவில்லை.
உலகமே AI பின்னால் ஓட, சீன மார்க்கெட்டை விட்டுக்கொடுத்தால் கம்பெனியின் லாபம் முற்றிலும் குறைந்து விடும்.
ஆப்பிளோட iPhone 17 சீனாவில்தான் தான் சக்கைப்போடு போடுது. சீன மார்க்கெட் இல்லை என்றால் ஆப்பிள் நிறுவனத்துக்கு பிரச்னைதான்.
எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்குப் போட்டியான சீனா BYD காரை களம் இறக்கியியுள்ளது. எப்படியாவது தனது Fully Autonomous Driving கார்களுக்கு சீனாவில் அனுமதி வாங்கிடனும். இதற்காகவே, எலான் மஸ்க்கும் சீனா சென்றுள்ளார். டெக்னாலஜில நாங்க தான் கெத்து என்று எப்போதுமே அமெரிக்கர்கள் சீன் போடுவார்கள்.
ஆனால், சீனாவுக்குள்ள சென்ற போது, தங்களோட சொந்த லேப்டாப், ஸ்மார்ட்போன் எதையுமே கொண்டு போகல சீனர்கள் வைஃபைல (Wi-Fi) குத்தினாலும் ஹேக் பண்ணிவிடுவார்கள் என்கிற பயம்தான் இதற்கு காரணம் . பிளக்-பாயிண்ட்ல போனை சார்ஜ் போட்டாலும் டேட்டாவை திருடிவிடுவார்கள் என்றும் பயந்துள்ளனர்.
இதனால், “பர்னர் போன்” (Burner phones)என்று சொல்லப்படும் சாதாரண வகை போன்களைதான் பயன்படுத்தியுள்ளனர்.எவ்வளவு தான் வர்த்தகப் போர் , தடையுத்தரவு என்று அமெரிக்கா பில்டப் குடுத்தாலும், இந்த உலகப் பணக்கார முதலாளிகளுக்கு சீனச் சந்தை இல்லையென்றால், தங்களோட வியாபாரம் படுத்து விடும் என்பது நன்றாகவே தெரியும்.
ஈரானுடனான போர் அமெரிக்காவை பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில் உலக அரங்கில் பலத்தை குறைய செய்துள்ளது. இதனால், ஆதி காலப் பகை மறந்து சீன மண்ணில் தனது மொத்த வியாபார ஜாம்பவான்களையும், அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியஸ்தர்களையும் களம் இறக்கியுள்ளது.
ஆனால், எந்தப் பயனுமில்லாமல் மீண்டும் நாடு திரும்பியுள்ளது. அமெரிக்காவின் தந்திரங்களை சீன அரசும் மக்களும் அறியாமல் இல்லை. சீனா ஒரு போதும் அமெரிக்கவை, மேற்க்கத்திய நாடுகளை நம்பியது இல்லை . ஆக ஈரான் அமெரிக்காவை சீனாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறது. சீனாவிடம் அமெரிக்காவை மண்டியிடவும் வைத்திருக்கிறது.



