திமுக அரசின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது – ஸ்டாலின்.!

பாஜகவின் டப்பா எஞ்சின் முன்னால், திமுக அரசின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.

அப்போது, பேசிய அவர் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாக்கும், ஒரு ஓப்பன் சேலஞ்ச் செய்கிறேன். தமிழ்நாட்டுக்கு நீங்கள் பிரசாரத்துக்கு வரும்போது, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி, பிரசாரம் செய்யும் தைரியம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, டெல்லியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலை அழுத்தி, அதற்கு ஏற்றவாறு இங்கு அதிமுகவை ஆப்பரேட் செய்வார்கள் என்று விமர்சித்தார். மேலும், 4 ஆண்டு காலமாக பழனிசாமி பேரில் நடந்த பாஜகவின் பிராக்சி ஆட்சியில் தமிழ்நாடு பார்த்துவிட்டது.

எனவே, பாஜகவின் டப்பா எஞ்சின் முன்னால், திமுக அரசின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *