கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் நிவாரணம் – கேடு கெட்ட அரசு, திமுக.! – EPS

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்த கேடு கெட்ட அரசு, திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியபோது, மு.க.ஸ்டாலினுக்கு இரண்டு நாட்களாக தூக்கம் போய்விட்டது என்றும் அதற்கு காரணம் ஆ.ராசா ஆடியோவில் பேசியதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று அந்த ஆடியோவில் ஆ.ராசா கூறியது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறினார். திருட்டு ரயிலில் வந்தவருக்கு இவ்வளவு ரோஷம் என்றால், விவசாயியாகப் பிறந்து உழைத்து வந்த தனக்கு எவ்வளவு இருக்கும்?” என்று எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியைச் சுட்டிக்காட்டி ஆவேசமாகப் பேசினார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்த கேடு கெட்ட அரசு, திமுக அரசு என்று குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு நேரடியாக வீடுகளுக்கே சென்று அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *