Chennai : ‘திமுக’ வெல்லும் ! – வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா.!

Advertisements

சென்னையின் பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருக்கின்றனர். இந்நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய ஆதவ், “சென்னையில் 13 தொகுதிகளில் திமுக ஜெயிக்கும்” என்று பேசியிருக்கிறார்.

ஏற்கெனவே வேட்பாளர் பெயர்களை மாற்றி சொல்வது, பக்கத்தில் இருக்கும் தவெக வேட்பாளருக்கு பதில், பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்பது என்று விஜய் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆதவ் அர்ஜுனாவும் இவ்வாறு பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த விஜய், தவெக வேட்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்டிருந்தார். புதுச்சேரியின் மணவெளி தொகுதியில் தவெக சார்பில் ராமு வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். அவருடன் பிரச்சார வாகனத்தில் வாக்கு கேட்க சென்ற விஜய், “நமது வேட்பாளர் செல்வத்துக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காமல் ஜர்க்கான வேட்பாளர் ராமு, “என் பெயர் ராமுங்க” என்று நினைவூட்ட.. விஜய் சுதாரித்துக்கொண்டு, “ராமுவுக்கு வாக்களியுங்கள்” என்று கூறியிருந்தார். விஜய் செல்வம் என்று குறிப்பிட்ட பெயர், பாஜக வேட்பாளரின் பெயராகும். தவெகவுக்கு வாக்களிக்க கேட்க சொன்னால், பாஜகவுக்கு வாக்கு கேட்கிறாரே! என்று சலசலப்புகள் எழுந்தன. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகின.

புதுச்சேரியில் இப்படி நடக்க.. சென்னையில், ஆதவ் அர்ஜுனா பேசியதும் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆதவ், “ஒட்டுமொத்த வட சென்னையும், திமுகவுக்கு எதிராக மாறியிருக்கிறது. சென்னையில் 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்” என்று கூறியிருந்தார்.

இதை கேட்டு ஒரு நிமிஷம் தொண்டர்கள் ஷாக் ஆகினர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *