என்னை பிச்சை எடுக்கச் சொல்கிறீர்களா?அண்ணாமலை பரபரப்பு  பேட்டி..! 

Advertisements
நான் அறக்கட்டளை தொடங்குவேன். அரசியல் செய்வேன். விவசாயம் செய்து ஆடு மாடு விற்பேன். அது என் இஷ்டம். நான் தொழில் செய்ய கூடாதா? என் காருக்கு எப்படி டீசல் போட முடியும். என் பிள்ளைகளுக்கு எப்படி பீஸ் கட்ட முடியும். என்னை பிச்சை எடுக்க சொல்கிறீர்களா என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குகையில் இருந்து வெளிப்பட்ட சிங்கம் போல பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து இருக்கிறார்.
பொதுவாக அண்ணாமலை காரசாரமாக பேசக் கூடியவர்தான். ஆனால் இதற்கு முன்பு எப்போதும் இது போல் கோபப்பட்டு பேசியதில்லை. அந்த வகையில் அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல , பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களாகவே தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அவர் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார்.
அவரது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கப்படுகிறது .கோவை அருகே விவசாய நிலம் வாங்கி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகப் போகிறார். நடிகர் விஜயுடன் கூட்டணி சேர போகிறார் என ஏராளமான பரபரப்பு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன . இதன் ஒரு கட்டமாக அவர் கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும்… அந்த நிறுவனம் கட்டி விற்கும் வீடுகள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கோவை வந்த அண்ணாமலை இடம் பத்திரிக்கை நிருபர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டார்கள் . நீங்கள் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்துவதாக  சமூக வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் வருகின்றன. இது உண்மையா? என்ற கேள்வியை நிருபர்கள் கேட்டார்கள் . இதற்கு அண்ணாமலை மிக ஆவேசமாக பதில் கூறினார். அவர் பேசும்போது இதில் என்ன தவறு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் என்ன மண்ணை சாப்பிடுவதா ?நான் பிசினஸ் செய்கிறேன். யாரையாவது அடித்து பிடுங்குகிறேனா.. அல்லது மிரட்டுகிறேனா .உங்கள் பணத்தை வாங்கிக் கொண்டேனா? என்னுடைய தொழிலை நான் செய்கிறேன்.
விவசாயம் செய்கிறேன் என்னுடைய அரசியலை நான் செய்கிறேன். இதில் தவறு என எதை நீங்கள் பார்க்கிறீர்கள் . நான் எங்கிருந்து சாப்பிடுவேன. என் குழந்தைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன். எதை செய்தாலும் நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எந்த தொழிலும் செய்ய வேண்டாம் என்று கையை கட்டிப்போட்டு விட்டு உட்கார வைத்தீர்கள் என்றால், நான் எங்கிருந்து சாப்பிடுவேன். என் காருக்கு எப்படி டீசல் போட முடியும் எப்படி அரசியல் செய்ய முடியும்
நான் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்வேன். அதில் தவறு இருந்தால் நீங்கள் சொல்லுங்கள் .இந்த கம்பெனி ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதில் இந்த தவறு இருக்கிறது. வருமான வரி கட்டவில்லை. ஜிஎஸ்டி கட்டவில்லை .இப்படி எல்லாம் தவறு இருந்தால் சொல்லுங்கள் . நான் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது .  கெமிக்கல் இண்டஸ்ட்ரி வைத்து எந்த மீனையாவது சாகடித்தேனா தண்ணீரை மாசு படுத்தினேனா.
எந்த தொழிலையும் தொடங்க எனக்கு உரிமை இருக்கிறது. இன்று கட்சியில் மாநில தலைவராக இல்லாத போது ஓடுவதற்கு எனக்கு நேரம் இருக்கிறது .என்னுடைய வேலையை செய்வதற்கு பொருள் ஈட்டுவதற்கு விவசாயம் செய்வதற்கு நேரம் இருக்கிறது . என்னுடைய நேரம் என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். என்ன தவறு செய்தேன் என்று கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன். நியாயமான முறையில் நான் பொருள் ஈட்டி நியாயமான முறையில் நான் அரசியல் செய்ய வேண்டும்.
அதை வைத்து என்னுடைய குடும்பத்தை நியாயமான முறையில் வாழ வைக்க வேண்டும்.  என்னை எதுவுமே செய்யக்கூடாது என்றால் எப்படி? நான் உப்பு போட்டு சாப்பிடுகிறவன். என்னுடைய எல்லா தொழிலிலும் தர்மம் இருக்கிறது .தொழிலே செய்யக்கூடாது என்றால் என்ன நியாயம் இருக்கிறது. நான் என்ன சாராயக் கம்பெனியா நடத்துகிறேன்.
இப்போது விமானத்தைப் பிடித்து கோவா போகவேண்டும் .கேரள மாநிலத்தின் எஸ்.ஐ.ஆருக்கு நான்தான் பொறுப்பு. இதே போல் லட்சத்தீவு செல்ல வேண்டும் என்றால் 60 ஆயிரம் ஆகும். அதை யார் எனக்கு கொடுப்பார்கள். நான் தொழில் செய்தால் தானே சாப்பிட முடியும். இதுவரை கட்சியில் இருந்து ஒரு ரூபாய் கூட நான் வாங்கியது கிடையாது நான் என்ன பிச்சை எடுக்கவா முடியும் . எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 2000 ரூபாய் செலவாகிறது. இதனை உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்குகிறேனா அல்லது தவறான நபர்களிடமிருந்து வாங்குகிறேனா .
இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்க போகிறேன். அதற்கு  நேரமும் மனவலிமையும் இருக்கிறது . நான் 24 மணி நேரத்தை கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு ஓடி ஓடி வேலை செய்கிறேன். நீங்களும் சோம்பேறியாக வீட்டில் இருக்காதீர்கள். பல இடங்களுக்கு செல்லுங்கள் நன்றாக வாழுங்கள் நிம்மதியாக வாழுங்கள். உங்களது சொந்த காசில் வாழுங்கள் . ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் .
முதல்வர் ஸ்டாலின் இன்றைக்கு என்ன தொழில் செய்கிறார். அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது .இதையெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா . டி ஆர் பாலு நீதிமன்றத்திற்கு வந்த கார் சாராய ஆலை பெயரில் இருக்கிறது. இதனை நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா என்னால் யாருக்கும் உபத்திரவம் வராது . ஒரு தொழிலில் 5 லட்சம் ரூபாய் பங்கு தொகையாக போட முடியாத அளவிற்கு நான் இருக்கிறேனா?
நிறுவனங்களில் 2 லட்சம் ரூபாய் வரை பங்குத்தொகை முதலீடு செய்திருக்கிறேன். ஆன்லைனில் கம்பெனிகளில் எவ்வளவு பங்கு முதலீடு என்பதை பாருங்கள். அந்த அளவிற்கு கூட தகுதி இல்லாமலா நான் இருக்கிறேன். என் மனைவி வேலை செய்கிறார். 10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி. கையிருப்பில் பணம் வைத்திருக்கிறேன். எனது அப்பா அம்மா விவசாயம் செய்கிறார்கள். இப்பொழுதும் ஆட்டுக்குட்டி விற்பனை செய்கிறோம் .என்னால் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்ய முடியாத அளவிற்கா இருக்கிறேன்.
நான் தொழில் செய்வேன், அரசியல் செய்வேன்m அறக்கட்டளையும் நடத்துவேன்m விவசாயமும் செய்வேன் . என் மீது தவறு இருந்தால் கேள்வி கேளுங்கள். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார் . இதனைத் தொடர்ந்து வருகிற 19ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருவதாகவும் தகவல் தெரிவித்தார். கோவையில் இயற்கை விவசாயிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொள்கிறார்கள். இவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த தகவலையும் அவர் தெரிவித்தார் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *