Crocodile On Road: அசால்ட்டாக நகர்ந்து போன முதலை!

Advertisements

சென்னை சாலையில் முதலை ஒன்று வேகமாக ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. புயலுக்கு இடையே முதலை இப்படி சாலையில் செல்வதால் மக்கள் இடையே பீதி ஏற்பட்டு உள்ளது.

சென்னை: மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்! இரவிலிருந்து நான் ஸ்டாப் ஒர்க்! உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்! இரவிலிருந்து நான் ஸ்டாப் ஒர்க்! கனமழை காரணமாக சென்னையில் பல சாலைகள் நீரில் மூழ்கி உள்ளன. அதோடு பல பகுதிகளில் மின்சாரம் அப்படியே தடை பட்டுள்ளது.

முதலை: விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றுள்ளது. மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த முதலை அருகே இருக்கும் ஏரி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *