Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களுடைய கூட்டணி யார் தங்களுக்கான வெற்றி வியூகம் என்ன என்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுகவை பொருத்தவரையில் விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் லீக் கொங்கு மக்கள் கட்சி மதிமுக என பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன .
அதிமுகவை பொறுத்த வரையில் இன்னமும் பலமான கூட்டணி அமையவில்லை என்று கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே கூட்டணி அமைத்துள்ளது. இதை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி பேசி வருகிறார்கள். மேலும் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . அநேகமாக அதிமுகவை பொருத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேமுதிகவும் இணையலாம் என தெரிகிறது .
இந்த சூழ்நிலையில் திமுகவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உள்குத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரையில் தங்களுக்கு இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் 25 தொகுதிகள் வேண்டுமென கேட்டு வருகிறார்கள் ஆனால் அதே சமயம் 25 தொகுதிகளை ஒதுக்க முடியாது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இருந்தபோதிலும் 15 தொகுதிகள் வரை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுத்தலாம் என தெரிகிறது .
அதே சமயம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்போது மதிமுகவினுடைய தொகுதிகளை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை குறைத்துக் கொண்டு அந்த தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கி விடலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது . இது தொடர்பாக வைகோ கடும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது எங்களுடைய தொகுதியை அதிகமாக்கி தர வேண்டுமே தவிர குறைத்து தரக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஏற்கனவே அவரது மகன் துரை வைக்கோ இந்த முறை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று பேசி வருகிறார் துரை வைகோ. இது தொடர்பாக டெல்லி பாஜக மேல் இடத்தில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதற்கிடையே வைகோவை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாக திமுக தரப்பில் பேசப்பட்டது. ஆனாலும் அவர் அதற்கு ஒத்துக்கொள்வதாக தெரியவில்லை எங்களுடைய தொகுதியை குறைத்து தரக்கூடாது மேலும் ராஜ்யசபா எம்பி பதவியும் தர வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார் .
இந்த சூழ்நிலையில் இறுதி கட்ட முடிவாக மதிமுக விலகிச் சென்றால் விலகிப் போகட்டும் என திமுக தலைமை இடம் முடிவெடுத்ததாக தெரிகிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் திமுகவிலிருந்து மதிமுக விலக நேரிடலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது . ஏற்கனவே திமுகவிலிருந்து பிரிந்து சென்ற மல்லை சத்தியா . இது தொடர்பாக அடிக்கடி பேசி வருகிறார். அவர் பேசும்பொழுதெல்லாம் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிவிடும் என்று பேசி வருகிறார். அந்த வகையில் மதிமுக விலகினால்ஒருவேளை மல்லை சத்தியா தலைமையிலான மதிமுக கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கும் என தெரிகிறது .
மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுக்கு கூடுதல் தொகுதியை ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டு திமுக மேலிடம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தற்பொழுது தமிழக வெற்றிக்கழகத்தில் இணையலாம் என ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் திமுக மேல் இடத்திற்கு தெரிய வந்துள்ளது . அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி தங்களை விட்டு விலகினால் விலகலாம் என்று திமுக மேலிடம்முடிவு எடுத்து இருக்கிறது .எனவே கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என்றும் சொல்லப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரையில் திமுகவை விட்டு விலக வேண்டாம் என்ற தீவிர முடிவில் இருக்கிறார்கள் எனவே தற்போதைய சூழ்நிலையில் 15 தொகுதிகளுக்கு அவர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள் என தெரிகிறது . இதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் அவர்களும் தங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது . காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ராகுல் காந்தி தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும்.
அந்த வகையில் ராகுல் காந்தி திமுகவை விட்டு விலகக் கூடாது என்பதில் தீவிர முடிவில் இருக்கிறார் எனவே காங்கிரசுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி பலமாக அமையும் என்று சொல்லப்படுகிறது . இது அல்லாமல் மற்ற கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு தொகுதியை அதிகப்படுத்தி தரவும் திமுக தரப்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் மதிமுக கம்யூனிஸ்ட் இல்லாத கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடும் என இறுதி முடிவாக தெரிகிறது .
Advertisements



